Enable Javscript for better performance
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 100 மில்லியன் டன் சரக்குகளை கையாள நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 100 மில்லியன் டன் சரக்குகளை கையாள நடவடிக்கை

    By DIN  |   Published On : 28th February 2019 12:58 AM  |   Last Updated : 28th February 2019 12:58 AM  |  அ+அ அ-  |  

    meet

    தூத்துக்குடியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன்.


    தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன்.
    இதுகுறித்து புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
    தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தற்போது 14.2 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய வகை கப்பல்கள் கையாளப்பட்டு வருகின்றன. இத் துறைமுகத்தில் தற்போது ஆண்டுக்கு 35 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. இதை 100 மில்லியன் டன் அளவுக்கு உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடனடியாக 10 முதல் 20 சதவீதம் அளவுக்கு சரக்குகளை கூடுதலாக கையாள திட்டங்கள் அமல்படுத்தப்படும். கூடுதல் சரக்குகளை கையாள துறைமுக உபயோகிப்பாளர்களை வரவேற்கும் விதமாக, பெரிய கப்பல்களை வருங்காலத்தில் கையாளும்போது அதற்கு கட்டணங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
    ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சரக்குப் பெட்டகங்களை இத் துறைமுகத்தில் இருந்து நேரடியாக அனுப்பும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகம் ஒரு சரக்குப் பெட்டக முனையமாக மாறும்.
    நிகழாண்டில் இதுவரை 31 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது இலக்கைவிட குறைவுதான் என்றபோதிலும் வரும் ஆண்டில் கரி, சுண்ணாம்புக்கல் போன்ற சரக்குகள் மொத்தமாக அதிகளவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோலியப் பொருள்கள், எரிவாயு பொருள்கள் போன்றவை அதிக அளவில் இந்தப் பகுதியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
    பேட்டியின்போது,  துறைமுக பொறுப்பு கழக துணைத் தலைவர் என்.வையாபுரி, சுங்கத்துறை ஆணையர் கே.திவாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp