
பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தனை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது கவலையையும், அக்கறையையும் பகிர்ந்து கொள்கிறேன். அவரை விரைந்து மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ராமதாஸ்: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப் படை விமானியும், சென்னையைச் சேர்ந்தவருமான அபிநந்தனை உடனடியாக மீட்க இந்திய அரசு தூதரக முயற்சிகளின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜவாஹிருல்லா: பாகிஸ்தான் பிடியில் சிக்கியிருக்கும் விமானி அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, ஒவ்வோர் அரசும் போர்க் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு மனிதாபிமான அடிப்படையில் நடத்தவேண்டும்.