திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருவாரூரில் ரூ.13.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தினுள் வந்து செல்லும் பேருந்துகள்.
பேருந்து நிலையத்தினுள் வந்து செல்லும் பேருந்துகள்.


திருவாரூரில் ரூ.13.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூர் அருகே விளமல் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 
இதையடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் பங்கேற்று குத்துவிளக்கேற்றினார். 
திருவாரூர் பேருந்து நிலையம் 11.08 ஏக்கர் பரப்பளவில் ரூ.13.36 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 5,022 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 35 பேருந்து நிறுத்தங்கள், 60 வணிகக் கடைகள்,  2 உணவகங்கள், பயணியர் காத்திருப்பு அறை, காவலர் கட்டுப்பாட்டு அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, பொருள்கள் பாதுகாப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் அறை, கழிப்பறைகள், உயர் கோபுர மின்விளக்கு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. 
இப்பேருந்து நிலையம் மூலம் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரங்களிலிருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெற வாய்ப்புள்ளது. 
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் முருகதாஸ், மண்டல செயற்பொறியாளர் திருமாவளவன், நகராட்சி ஆணையர் (பொ) உமாமகேஸ்வரி மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com