ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று ஆலை நிர்வாகத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று ஆலை நிர்வாகத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம்  தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று அறிவித்ததோடு, ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

அதன்படி ஆலை மீண்டும் செயல்பட ஏதுவாக மின் இணைப்பு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஆலை நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று ஆலை நிர்வாகத்திற்கு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வரியமும் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவரான ஷம்பு கல்லோலிகர் அறிவுறுத்தலின் பேரில், இந்த தகவலானது கடிதம் மூலமாக ஆலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com