சுடச்சுட

  
  ooty


  நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை காரணமாக உதகை சுற்றுப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
  நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேர வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வந்தது. கடந்த இரு நாள்களாக உதகை சுற்றுப்பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக உதகை நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் 4 டிகிரி முதல் 2 டிகிரி வரையிலும், வனப் பகுதிகளை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் 2 டிகிரி முதல் மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகிறது. 
  இதன் காரணமாக உதகை நகரம் இரவு 7 மணிக்குப் பின்னர் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. 
  ஜனவரி 1ஆம் தேதி இரவில் உதகை மட்டுமின்றி அதையொட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் உறைபனியியின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக உதகையில் பகல் நேரங்களில் காலை 11 மணிக்குப் பிறகே வெயிலின் தாக்கம் தெரிகிறது. தவிர, பிற்பகல் 3 மணிக்குள் மீண்டும் குளிரத் தொடங்கி விடுகிறது. இதனால் உதகையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai