சுடச்சுட

  
  kodaikanal


  கொடைக்கானலில் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
  கொடைக்கானலில் தற்போது பனிப் பொழிவு காலமாகும். பகல் நேரங்களில் அதிகமான வெயில் நிலவுகிறது. பிற்பகல் 3 மணி முதல் குளிர் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து இரவில் கடும் பனிப் பொழிவு ஏற்படுகிறது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் கடந்த சில தினங்களாக உறை பனி நிலவுகிறது. 
  இந்த உறை பனியால் கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியப் பகுதிகளில் உறை பனி காணப்பட்டது. இந்த பனிப் பொழிவால் கொடைக்கானல் பொது மக்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். வியாபாரப் பகுதிகளில் வியாபாரிகள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். 
  கொடைக்கானலில் அதிகபட்சமாக 13 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 6 டிகிரி செல்ஸுயசும் வெப்பம் நிலவி வருகிறது. இந்தப் பனிப் பொழிவானது காலை 9 மணி வரை நீடிக்கிறது. இது குறித்து கொடைக்கானலிலுள்ள வானவியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பனிப் பொழிவு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த சீதோஷண நிலையானது தொடர்ந்து 10 நாள்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai