தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக அமைச்சரவை வியாழக்கிழமை (ஜன. 3) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், தொழில் துறை தொடர்பான முக்கிய விவாதங்கள்
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது


தமிழக அமைச்சரவை வியாழக்கிழமை (ஜன. 3) கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், தொழில் துறை தொடர்பான முக்கிய விவாதங்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் ரூ.16 
ஆயிரம் கோடி அளவிலான புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன. 3) மீண்டும் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரவிருக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com