
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துளளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ந்தேதி கடைசி நாளாகும். ஆனால் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துளளார். தஞ்சையில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அவர் இதனை அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ் அமமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இவர், 2016 சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டடவர். இடைத்தேர்தலில் போட்டியிட எஸ்.காமராஜ் வரும் 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.