புதுமையாக சிந்தித்தால் தொழில்முனைவோராகலாம்:  அமைச்சர் கே.பாண்டியராஜன்

புதுமையாக சிந்தித்தால் தொழில்முனைவோராகலாம் என்று மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆலோசனை தெரிவித்தார்.


புதுமையாக சிந்தித்தால் தொழில்முனைவோராகலாம் என்று மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆலோசனை தெரிவித்தார்.
இந்திய மருந்தக சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில், 57-ஆவது தேசிய மருந்தக வாரத்தின் நிறைவு விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 
சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவர் பேசியது:
இந்திய மருந்தகத் தொழில் உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுகிறது. சுகாதாரத்துறைக்கு முதுகெலும்பாக மருந்தகத் தொழில் உள்ளது. புதுமையாக சிந்திப்பவர்களை உலகம் வரவேற்க தயாராக உள்ளது. 
சொந்தப் பணத்தை வைத்துத்தான் தொழில் செய்ய முடியும் என்ற நிலை இப்போது மாறியுள்ளது. புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, முதல் தலைமுறையுடன் புதிய சிந்தனை உள்ள புதிய தொழில்முனைவோருக்கு நீட்ஸ் திட்டத்தில் குறைந்த வட்டியில் ரூ.5 கோடி வரை கடன் அளிக்கப்படுகிறது. இதில், ரூ.25 லட்சம் வரை மானியம் கொடுக்கப்படுகிறது. எனவே, புதுமையாக சிந்திக்கத் தெரிந்தவர்கள் எளிதில் தொழில்முனைவோராக முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், இந்திய மருந்தக சங்கத்தின் தமிழகப் பிரிவு தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் ஜெயசீலன் உள்பட பலர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com