தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை: பதவி பறிபோகுமா?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1998ம் ஆண்டு விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

20 ஆண்டுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கில், 108 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் 16 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.  இதில் அமைச்சர் பாலகிருஷ்ணாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி எம்எல்ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com