
தமிழக பாஜக-வின் தகவல் தொழில்நுட்பம் மற்றம் சமூக ஊடகப் பிரிவின் புதிய மாநில அமைப்பாளராக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் புதிய அமைப்பாளராக நிர்மல்குமாரை, மாநில தலைவர் தமிழிசை ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் குமார், இப்போது சென்னையில் உள்ள முன்னணி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் உள்ளார். பாஜக-வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைந்து கடந்த 14 ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணி ஆற்றிவருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.