Enable Javscript for better performance
ஜெயலலிதா மரணம்: தம்பிதுரை, சி.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா மரணம்: தம்பிதுரை, சி.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை

    By DIN  |   Published on : 08th January 2019 01:28 AM  |   அ+அ அ-   |    |  

    VIJAYABASKAR


    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமையும் (ஜன. 10), மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை வெள்ளிக்கிழமையும் (ஜன. 11) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ், சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், எய்ம்ஸ், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
    தற்போது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த வாரம் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
    அழைப்பாணை: இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமையும் (ஜன. 10), மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை வெள்ளிக்கிழமையும் (ஜன. 11) ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp