சுடச்சுட

    

    தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்.. புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 08th January 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fishermen

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசென்றனர்.

    இந்நிலையில், கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்களை வரும் 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அடுத்தடுத்த நாட்களில் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது புதுக்கோட்டை பகுதி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai