Enable Javscript for better performance
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம்

    By DIN  |   Published on : 08th January 2019 02:33 AM  |   அ+அ அ-   |    |  

    cvs


    மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது என்று மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    இயற்கைச் சீற்றத்தால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு இடைத் தேர்தல் நடத்தலாம் என்று அரசுத் தரப்பில் கருத்து சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. எப்போதும் தேர்தலைத் துணிவுடன் சந்திக்கும் இயக்கம் அதிமுக என்பதால், அச்சப்படாமல் எதிர்கொள்ளத் தயாராகி வந்தது. 
    இதனிடையே, அங்குள்ள நிலவரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் கருத்துகளைக் கேட்டு, தேர்தல் அறிவிப்பை தற்போது ரத்து செய்துள்ளது. 2 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் எந்தத் தவறும் இல்லை. மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும். 
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஆணைய வழக்குரைஞர் குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்தது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியானது. ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியாமல், ஊமையாக இருந்து விட்டோம். ஆணையத்தின் விசாரணை நடப்பதால், அதன் மூலம் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆணையத்தின் மூலமே தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதால், அதிமுக தொண்டன் என்ற முறையில், சந்தேகங்களை மேற்கோள்காட்டி கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு உரிய அரசு அதிகாரிகள் பதில் சொல்லாமல், திருப்பி கேள்விகளைக் கேட்கின்றனர். 
    சந்தேகம் என்று வந்தால், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என யாராக இருந்தாலும், அவர்களைக் கேள்வி கேட்க அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான் கேள்வி எழுப்பினேன். எனது குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் அதிகாரிகள் சேர்ந்து முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் கண்டனத்துக்குரியவை. அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில், அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அவர்கள் தங்களது தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது.
    எங்களை கேள்வி கேட்கக் கூடாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பினேன். இதற்கு அதிகாரிகளுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசி வருகிறார். ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp