நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக-கர்நாடக எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்

தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்
நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக-கர்நாடக எல்லையில் பேருந்து சேவை நிறுத்தம்


தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் எதிரொலியாக தமிழக-கர்நாடக, கேரள பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு, வங்கி, காப்பீடு, பிஎஸ்என்எல், அஞ்சல், துறைமுகம், போக்குவரத்து, மின்சாரம், மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய 70 அகில இந்திய சம்மேளனங்கள் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு தினங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் 9 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த போராட்டத்தின் எதிரொலியாக, ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு இயக்கப்பட்டு வந்த தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

இதேபோன்று கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com