Enable Javscript for better performance
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று வருகை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இன்று வருகை

    By ராமநாதபுரம்  |   Published On : 09th January 2019 07:36 AM  |   Last Updated : 09th January 2019 07:36 AM  |  அ+அ அ-  |  

    keralaboat

    இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பாம்பன், தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்  இன்று விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.   

    ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என 16 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். படகுகளை பறிமுதல் செய்த கடற்படையினர் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சி.ஐ.டி.யூ மீன்பிடி தொழில் சங்கத்தினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.   அதைத்தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்தது. அவர்கள் அனைவரையும் இன்று விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp