சுடச்சுட

    

    குரூப் 4 தட்டச்சர் பணித் தேர்வு: வரும் 21 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

    By DIN  |   Published on : 11th January 2019 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21-ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
    இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
    குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள தட்டச்சர் இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 11-இல் நடந்தது. எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் விவரங்கள் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 
    அதில், தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பாரிமுனை அருகேயுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி முதல் நடைபெறும்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai