சுடச்சுட

  

  திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

  By DIN  |   Published on : 11th January 2019 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamizhasai

  திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
  நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.  கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

  மோடி தலைமையிலான அரச தமிழகத்திற்கு நல்லதுதான் செய்கிறது. தேசிய எண்ணத்தோடு யார் வேண்டுமானாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம். பிரதமர் இந்தந்த கட்சிகள் தான் கூட்டணிக்கு வரவேண்டும் என கூறவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலினுக்கு ஏன் ஆசை வருகிறது. 

  திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை. ராகுல்காந்தி தலைமையில்தான் கூட்டணி என அழுத்தமாக கூற வேண்டாமா?. ஸ்டாலின் வரிந்துகட்டி பேசுவதால்தான் ஏதோ சந்தேகம் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai