சுடச்சுட

  

  பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ஏன் நிறுத்த வேண்டும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

  By DIN  |   Published on : 11th January 2019 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  high_court

  பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ஏன் நிறுத்த வேண்டும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

  கடந்த 1998-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசுப் பேருந்து, காவல்துறை வாகனம் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தன.  இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்து வந்ததார்.  

  இந்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து வரும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் பதவியை இழந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

  இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் 72ஆவது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் நேரடியாக இல்லை எனவும் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டது.

  பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ஏன் நிறுத்த வேண்டும். கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது தான். மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் பொதுச்சொத்தை சேதப்படுத்துவதா? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி பார்த்திபன் இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மதியம் ஒத்திவைத்தார். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai