சுடச்சுட

    

    "பேட்ட" திரைப்படம் அனைவருக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த்

    By DIN  |   Published on : 11th January 2019 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajini

    "பேட்ட" திரைப்படம் அனைவருக்கும் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேட்ட. பொங்கலையொட்டி நேற்று வெளியான  இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்வது பழைய ரஜினியை பார்த்தது போன்று உள்ளது என்பது தான். 

    இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். பின்னர் அவர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள். பேட்ட படம் மக்களுக்கு ரொம் பிடித்திருக்கிறது. ரொம்ப சந்தோஷம். இந்த பெருமையெல்லாம் கார்த்திக்சுப்புராஜையே சேரும். 

    மக்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம் வேலை. ஒவ்வொரு ஷாட்டும் சீனும், உசுப்பேற்றி உசுப்பேற்றி பண்ண வைத்துவிட்டார்’ என்றார். தொடர்ந்து திரையில் நாயகனாக வலம் வரும் ரஜினி எப்போது தலைவனாக வருவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்வி எழுப்பினர். அதற்கு `அதைப் பிறகு பார்க்கலாம்' என்று பதிலளித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai