சுடச்சுட

  

  பொங்கலுக்கு அரசுப் பேருந்துகளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு; ரூ. 6 கோடி வசூல்

  By DIN  |   Published on : 11th January 2019 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ. 6 கோடியே 8 லட்சத்து 82 ஆயிரம் கிடைத்துள்ளது.
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 தினசரி பேருந்துகளுடன், ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  அதுபோல பொங்கல் பண்டிகை முடிந்து, ஊர் திரும்ப வசதியாக ஜனவரி 17 முதல் 20 ஆம் தேதி வரை பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பேருந்துகளும், பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
  இந்த நிலையில், இந்த அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் இதுவரை 1.25 லட்சம் பேர் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
  இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் (இயக்கம்) பொன்முடி கூறியது:
  பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சொந்த ஊர்களிலிருந்து திரும்பவும் அரசுப் பேருந்துகளில் ஜனவரி 10 முதல் 20 ஆம் தேதி வரை பயணிப்பதற்காக தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரத்து 808 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ. 6 கோடியே 8 லட்சத்து 82 ஆயிரம் டிக்கெட் வசூல் கிடைத்துள்ளது. 
  ஜனவரி 9 ஆம் தேதி மட்டும் அரசுப் பேருந்துகளில் 14,551 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 69.02 லட்சம் வசூல் ஆகியுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai