77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள்: புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் 
நாட்டுக் கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் 


தமிழகத்தில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
தமிழகத்தில் நாட்டுக் கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், கோழி வளர்ப்புத் தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. 
எனவே, கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் கோழி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், ரூ.50 கோடி மதிப்பில் 77 ஆயிரம் ஆயிரம் கிராமப்புற 
பெண்களுக்கு தலா ஒரு பயனாளிகளுக்கு 50 விலையில்லாத நாட்டுக் கோழிகள் வழங்கப்பட உள்ளன. 
இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு கோழிகளை முதல்வர் பழனிசாமி அளித்தார். இந்த கோழிகளை அடைத்து வைப்பதற்கான கூண்டுகளையும் அவர் வழங்கினார்.
தேர்வு எப்படி? நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் நான்கு அல்லது ஐந்து கிராமங்களில் உள்ள பயனாளிகள் குழுவாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர். 
அருகருகே உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைப்பதால் அந்தக் குழுவுக்குத் தேவையான தீவனம் போன்ற பொருள்களை கொள்முதல் செய்யவும், கோழி வளர்ப்பின் மூலம் பெறப்படும் பொருள்களைச் சந்தைப்படுத்துவதும் எளிதாகும்.
ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை கோழிகள், சேவல் மற்றும் பெட்டைக் கோழிகள் சரிவிகிதத்தில் அளிக்கப்படும். 
இதன்மூலம், அடுத்த 16 வாரங்களில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம். மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களைப் பராமரிப்பதன் மூலம் இனப்பெருக்கத்துக்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து, அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்டலாம்.
இந்தப் புதிய திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com