சுடச்சுட

  

  கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

  By DIN  |   Published on : 12th January 2019 10:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mrv  சென்னை: கடந்த 2 நாட்ககளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கலுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருபவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

  பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள், சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளில் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு மையங்களில் 1.61 லட்சம் பேர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

  பேருந்து நெரிசலில் சிக்கிய அமைச்சர் விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் பிடித்து கோயம்பேடு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai