சுடச்சுட

  

  கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள்: நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை வேண்டும் - தினகரன் பேட்டி

  By DIN  |   Published on : 12th January 2019 07:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ttv

   

  சென்னை: கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

  சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், கோடிக்கணக்கான தொண்டர்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதா மக்கள் பணியில் கால நேரம் பாராது உழைத்தவர். தனக்கு ஓய்வு தேவை என நினைக்கும்போது அவர் விரும்பி சென்றுவந்த இடம் கோடநாடு. ன

  அந்த கோடநாடு இல்லத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை, கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் ஒட்டுமொத்த தொண்டர்களை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.

  அச்சம்பவங்களின் பின்னணியில் பதவியில் இருக்கும் ஏதோ ஒரு பெரும்புள்ளிக்கு தொடர்பு உள்ளதாக அப்போதே செய்திகள் வெளிவந்தன. அச்செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் படும்படியாகவே இந்த விசாரணையின் திசையும், வழக்கின் வேகமும் நேற்றைக்கு முன்தினம் வரை இருந்துவந்தது.

  ஜெயலலிதாவை தெய்வமாக கருதுவதாக சொல்லும் இவர்கள், தினமும் ஜெயலலிதா ஆட்சியைத்தான் நடத்துகிறோம் என கொக்கரிக்கும் இவர்கள், ஏன் இந்த விசாரணையை தீவிரப்படுத்தவில்லை. எத்தனையோ, விசாரணை அமைப்புகள் இருக்கும்போதும், விரைவு நீதிமன்றங்கள் இருக்கும்போதும் ஏன் இந்த காலதாமதம்?  

  இவைகளுக்கு விடையளிக்கும் விதமாக நேற்று டெகல்கா நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அவர்கள் தில்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த குற்றச் சம்பவங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அவரும் மற்றும் இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சயனும் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். 

  கோடநாடு இல்லத்திலிருந்து கோப்புகளை திருடிவரச்சொன்னது எடப்பாடி பழனிசாமி தான் என ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் கூறியதாக சயன் தெரிவித்துள்ளார். 

  இக்குற்றச் சம்பவத்தின் பின்னணியில் பதவியிலிருப்பவரது பெயரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், மத்திய மாநில அரசுகளின் கீழுள்ள  எந்த விசாரணை அமைப்பும் முறையான விசாரணையை பயமின்றி மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. 

  இந்த நிலையில், எந்த விசாரணை அமைப்பு இதனை விசாரித்தாலும் அதை கண்காணிக்கும் விதமாக பதவியிலுள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் அந்த விசாரணையை நடத்தவேண்டும். இல்லையேல், நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai