சுடச்சுட

  

  பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது? தினகரன் பரபரப்பு பேட்டி

  By DIN  |   Published on : 12th January 2019 07:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DINAKARAN

   

  பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் இலவசப் பொருட்களின் குற்றச்சாட்டில் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

  சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையையட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

  ஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

  பொதுமக்களுக்கு வழங்கவேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையை சில தனிநபர்கள் கைப்பற்றி வெளி மார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. 

  அதேபோல, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்கவேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டிற்கு கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது? இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது? என கேள்வி எழுப்பிய தினகரன், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai