சுடச்சுட

  

  பொதுமக்கள் கவனத்திற்கு... பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் - விமான நிலையம்

  By DIN  |   Published on : 12th January 2019 07:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chennai airport -


  சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் மக்கள் போகியன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

  இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018 ஜனவரி14 இல் டயர், பழைய பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து பொதுமக்கள் எரித்ததால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தின் காரணமாக, காலை11மணி வரை விமானங்களை இயக்க முடியவில்லை. அதிகாலை முதல் புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

  அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை 73 விமானங்கள் பல இடங்களுக்கு புறப்படுகின்றன. 45 விமானங்கள் பல இடங்களில் இருந்து தரை இறங்குகின்றன. போகி புகையினால் 11 மணிக்கு மேல் தரையிறங்குகின்ற விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், புறப்பட வேண்டிய விமானங்கள் எல்லாம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பலமணி நேரம் விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்அனுபவத்தின் அடிப்படையில், விமானநிலைய அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, இந்த ஆண்டு பயணிகளின் அசவுகரியங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

  எனவே, சென்னை விமானநிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் நேரங்களை முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதற்காக 'சென்னை ஏர்போர்ட்' என்ற செயலியை பயன்படுத்தி கொள்ளவும். ஆகவே, விமானபோக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், பழையபொருட்களை எரிப்பதை தவிர்த்து ஆதரவு அளிக்கும்படி விமானநிலையம் அருகே வசிக்கும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

  விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரம் குறித்து, விமான சேவை தொலைப்பேசி எண்களான 044- 22563100, 22563600, 22563229, 22560542 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai