சுடச்சுட

  
  congress

  மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை பாஜக பல வகையில் மிரட்டி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
   சென்னை சத்தியமூர்த்திபவனில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலுக்கு எல்லா வகையிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
   தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இதற்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பங்கேற்க உள்ளார்.
   தேர்தல் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் திமுக ஒரு போதும் கூட்டணி அமைக்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. இதற்காக, அதிமுகவை பலவகையிலும் மிரட்டி வருகிறது. அமைச்சர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி அவர்களை மிரட்டி வருகிறது.
   கோடநாடு விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் உண்மை நிலையை அறிய பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
   முன்னதாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அப்சரா ரெட்டி திருநாவுக்கரசரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai