சுடச்சுட

  

  கொடநாடு விவகாரம்: மேத்யூஸை பிடிக்க தனிப்படை தில்லி விரைவு

  By DIN  |   Published on : 13th January 2019 02:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mathews

   

  கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சியில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது உண்மைக்கு மாறானது என முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். மேலும், அதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  மேலும், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இதில், கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பிப்ரவரி 2-இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்று கூறினார்.

  இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை ஞாயிற்றுக்கிழமை தில்லி விரைந்துள்ளது. அதுபோன்று கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சயான், ரவி ஆகியோரை பிடிக்கவும் மற்றொரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

  முன்னதாக, 2017-ல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தான் நடத்திய புலனாய்வை ஆவணப் படத்தை பத்திரிகையாளர் மேத்யூஸ் வெளியிட்டார்.

  கட்சி நிர்வாகிகள் தொடர்பான ஆவணங்களை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுப்பதற்காகவே அவர்கள் சென்றதாகவும் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai