சுடச்சுட

  

  சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

  By DIN  |   Published on : 13th January 2019 03:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cvs


  விழுப்புரம்: சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியில் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பொய்யான குற்றத்தாட்டுகளுக்கு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின், சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

  இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தில்லி விரைந்துள்ளனர். அதுபோன்று கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சயான், ரவி ஆகியோரை பிடிக்கவும் மற்றொரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai