சுடச்சுட

  

  சுற்றுச்சூழல் பாதிக்காமல் போகிப் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 13th January 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொதுமக்கள் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்தார்.
   சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
   இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்த வனம், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் பேசியது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையின்போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
   இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
   இந்தப் பயிலரங்கில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதில், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட குடியிருப்பு சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai