சுடச்சுட

  

  நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும்

  By DIN  |   Published on : 13th January 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ramadoss1

  சம்பா நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
   இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
   கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 30 விழுக்காடு குறைவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
   திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக உழவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வழக்கமாக சம்பா பருவ நெல் ஈரப்பதமாக இருக்காது. ஆனால், இப்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால்தான் நெல் ஓரளவு ஈரப்பதமாக உள்ளது. இது இயற்கையின் தவறே தவிர, உழவர்களின் தவறு அல்ல.
   எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai