சுடச்சுட

  

  பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு

  By DIN  |   Published on : 13th January 2019 02:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivakasi

   

  பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணத்தால் 1400-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள், நவம்பர் 2-ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு, போராட்டம் நடைபெற்று வருகிறது.  

  கடந்த 2 மாதமாக மூடப்பட்டிருக்கும் பட்டாசு ஆலைகளால் சிவகாசி பகுதியில் தொழில்துறை முடங்கிக் கிடக்கிறது. 40 சதவீதம் வியாபாரம் சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

  மேலும் பட்டாசு தயாரிக்கப் பயன்டும் மூலப்பொருள்கள் விற்பனை செய்து வரும் கடைகள், பட்டாசு பேக்கிங் செய்யப் பயன்படும் காகித அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆப் செட் அச்சகங்கள், பட்டாசுக்கு தேவையான குழாய்கள் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.

  எனவே பட்டாசுத் தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

  இந்நிலையில், ஜனவரி 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பட்டாசு தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஆர்.ஆர்.நகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டையில் போராட்டம் நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai