சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  இதுகுறித்து வனத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  பொங்கல் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஜன. 15) முதல் வியாழக்கிழமை (ஜன. 17) வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும். 
  பார்வையாளர்களின் வசதிக்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. www.aazp.in என்ற இணையதளம், vandalur zoo என்ற செல்லிடப்பேசி செயலி மூலமும் நுழைவுச் சீட்டுகளைப் பதிவு செய்யலாம்.
  கேளம்பாக்கம் சாலையில் கிரசென்ட் பல்கலைக்கழகம் அருகேயும், விஜிபி திடலிலும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவுக்கு வந்து செல்ல இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai