சுடச்சுட

  

  மேக்கேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு: பிரதமருக்கு 1 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்

  By DIN  |   Published on : 13th January 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கு 1 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது.
   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி, காவிரி பாசன சபை ஆகியவை இணைந்து திருச்சியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கிய இயக்கத்துக்கு தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். இயக்கத்தை தொடக்கி வைத்து காவிரி பாசன சபை தலைவர் மகாதானபுரம் ராஜாராம் பேசியது:
   கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் இரண்டு நீர்மின் திட்டங்களை நிறைவேற்ற அம்மாநில அரசு முயல்கிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த நடவடிக்கை தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரில் பாதிப்பை ஏற்படுத்தும், லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்.
   கர்நாடக அரசின் முயற்சியை தடுக்கக் கோரி தமிழக முதல்வர் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகம் தொடர்ந்து அணை கட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளோம் என்றார் அவர்.
   நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகி காந்திபித்தன், பாலுதீட்சிதர், இனாம்குளத்தூர் பாரூக், ஹேமநாதன், தமாகா விவசாய அணி மாநிலப் பொருளாளர் வயலூர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாதத்துக்குள் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளை பிரதமருக்கு அனுப்பவுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai