மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்

"யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; இதை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி புரிந்து கொள்ள வேண்டும்' என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்

"யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; இதை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி புரிந்து கொள்ள வேண்டும்' என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான கோப்புக்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 இந்த நிலையில் ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி நினைக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் என்னை சந்தித்த போது, பணி அமர்த்துதல், பணி இட மாற்றம், அரசு கொள்கைகள், நிதி விவகாரங்களில் ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு நான் (ஆளுநர்) ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
 ஆனால், அவை அவ்வாறு நடக்காது என்று நான் தெரிவித்ததுடன், எனது தனிப்பட்ட ஆவணத்தில் இந்த உரையாடல்களைப் பதிவும் செய்து கொண்டேன்.
 ஆளுநர் மாளிகையில் அனைத்து முடிவுகளும் தகுதியின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. ஒரு கோப்பு அனுப்பப்படும்போது, அது சட்ட விதிக்கு உள்பட்டிருக்கிறதா என்பதை முதல்வர் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் முடிவுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆளுநர் மாளிகைக்கு என தனிப் பொறுப்பு, கடமைகள் உள்ளன.
 நிதிநிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பது ஆளுநரின் கடமை. பயமின்றி, யாருக்கும் சாதகமாக அமையாத வகையில் விதிகளை நிலைநிறுத்த வேண்டும்.
 தனிப்பட்ட முறையில் நான் யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன் என்பதை முதல்வர் நாராயணசாமி புரிந்து கொள்ள வேண்டும்.
 முதல்வரின் நடத்தை தொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கோப்பு, கடிதம் எழுதுவதில் நாகரிகமற்ற வார்த்தைகளை முதல்வர் நாராயணசாமி பயன்படுத்தி வருகிறார்.
 புதுவையின் நலன் கருதி அவருக்கு ஞானம், முதிர்ச்சி கிடைக்கும் என நம்புகிறேன். அவருக்கு எனது பொங்கல் நல்வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com