சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கு ரூ.12 ப்ரிமீயத்தில் காப்பீடு வசதி

  By DIN  |   Published on : 14th January 2019 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jallikattu


  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களுக்கான ரூ.12 ப்ரிமீயம் செலுத்து ரூ.2 லட்சத்துக்கான ஒரு ஆண்டு காப்பீடு வசதி முதன்முறையாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

  பிரதமரின் சுரக்ஸா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.12க்கு ஒரு லட்சம் மற்றும் ரூ.300க்கு ரூ. 2 லட்சத்துக்கான காப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியும், விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணத்தை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

  காப்பீடு வசதியுடன் மாடுபிடி வீரர்களுக்கு இதய துடிப்பு, உயரம், எடை பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர். காப்பீடு வசதி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாடு பிடி வீரர்கள் தெரிவித்தனர்.

   மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுபிடி வீரர்களும் இந்த காப்பீடை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai