சுடச்சுட

  

  தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை... வாகன ஓட்டிகள் அச்சம்!

  By DIN  |   Published on : 15th January 2019 07:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  petrol


  இந்த மாதத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்று திங்கள்கிழமை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 40 காசுகளும், டீசல் விலை 53 காசுகளும் உயர்ந்துள்ளன. 

  கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33 என்ற உச்ச விலையில் இருந்தது. அதே மாதம் 17-ஆம் தேதி டீசல் விலை உச்சத்தை எட்டி, ஒரு லிட்டர் ரூ.80.04-க்கு விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டன. இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

  இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது.

  இந்நிலையில், கடந்த வாரம் வரை இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில தினங்களாக உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.72.39 ஆகவும், டீசலின் விலை ரூ.67.25 ஆகவும் இருந்து வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை 5வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

  சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.72.79 ஆகவும், டீசல் விலை 53 காசுகள் அதிகரித்து ரூ.67.78 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

  தொடர்ந்து 5வது நாளாக மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதை நினைத்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai