தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் விழாவை தமிழகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் விழாவை தமிழகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

ஆண்டுதோறும் தை முதல் நாளை உழவர் திருநாளான பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர். அறுவடைத் திருநாளான இந்நாளில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்ய தயாராகி வருகின்றனர். 

சூரிய பகவானுக்கு இல்லங்கள் முன்பும், அறுவடை செய்த நிலங்களிலும் புதுப்பானை வைத்து, கரும்புடன் மஞ்சள், பொங்கல் இட்டு, விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக புத்தாடைகள் அணிந்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து பட்டி பெருக, பால் பொங்க, பொங்கலோ பொங்கல் என்று கூறி, கால்நடைகளுக்கு பொங்கலை உண்ணக்கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் வழிபாடு நடத்தியும் வருகின்றனர். 

பொங்கள் பண்டிகை நாளான இன்று கோவில்களில் நடைபெற்று வரும் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் காலையில் இருந்தே வழிபாடு செய்து வருகின்றனர். 

இதைப்போன்று தமிழர்கள் வாழ்கிற மலேசியா, கனடா, இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளிலும் இன்று பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com