சுடச்சுட

  

  பிரதமரின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்: தமிழிசை சௌந்தரராஜன்

  By DIN  |   Published on : 17th January 2019 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilesai1


  பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 
  எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் உள்பட பலவேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 ஆம் தேதி மதுரை வருகிறார். அன்றைய தினம் பாஜக சார்பில் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான இடத்தை தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, கட்சியின் மாநில செயலர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை சொந்திரராஜன் கூறியது:
  பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். மத்திய பாஜக அரசு சார்பில் இதுவரை தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எல்லாவிதத்திலும் தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க ரூ.1,300 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவேன் என அறிவித்துள்ள வைகோ ஓரங்கட்டப்பட வேண்டியவர் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றார்.
  ஹெச்.ராஜா கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்து, 60 ஆயிரம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தில் இலவச கேஸ் இணைப்பு, தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை எதிர்ப்பவர்களை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்கு திமுக ஆதரவாக இருந்துவிட்டு, தற்போது மற்றவர்கள் பழி சுமத்துகின்றனர் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai