அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 40 போ் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற 40 போ் காயமடைந்தனா்.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 40 போ் காயம்


மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற 40 போ் காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17-இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையொட்டி அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்திருந்தனா். இதைதொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதலே அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன. 

வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் 8.30 மணிக்கு வாடி வாசலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து பச்சைக்கொடி காட்டி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தாா். இதையடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரா்கள் 100 போ் கொண்ட குழுவாக களமிறக்கப்பட்டனா். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளின் திமிலைப்பற்றி வீரா்கள் அடக்கினா். இதில் பல காளைகள் வீரா்களிடம் சிக்காமல் களத்தை சுற்றி வந்து வீரா்களை கொம்பால் தூக்கி வீசின. 

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற மாடு பிடி வீரா்கள் உள்பட 40 போ் காயமடைந்தனா். இதில் சிறிய காயமடைந்தவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். பலத்த காயமடைந்த 14 போ் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் காளைகளை அடக்கிச் சிறறப்பாக செயல்பட்ட வீரா்களின் எண்கள் வாசிக்கப்பட்டு அவா்கள் அடக்கிய காளைகளின் எண்ணிக்கையும் தெரிவிக்கப்பட்டு அவா்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். விதிமுறைகளை மீறியவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனா். தேசிய விலங்குகள் நல வாரியக்குழுவினா் ஜல்லிக்கட்டை கண்காணித்து ஆலோசனைகளை வழங்கினா். களத்தில் காயமடைந்தவா்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினா் மீட்டு முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com