ஆளுநர் மாளிகையில் பொங்கல் தின கொண்டாட்டம்

ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா புதன்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக
தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒரு பகுதியாக கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்த தமிழக ஆளுநர்
தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒரு பகுதியாக கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்த தமிழக ஆளுநர்


ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா புதன்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அப்போது அரங்கேற்றப்பட்டன.
அவற்றை கண்டு களித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்தும் விழாவாக பொங்கல் திருநாள் விளங்கி வருவதாகத் தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ராஜகோபால் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், நாட்டுப்புற இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், வயலின் கலைஞர் விஜி கிருஷ்ணன் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பொங்கல் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: 
தென்மேற்கு பருவ மழையை நம்பியிருக்கும் பிற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழகம் வடகிழக்குப் பருவ மழையைச் சார்ந்திருக்கிறது. 
அதனால்தான் அந்தப் பருவம் நிறைவடைந்த பிறகு, தை மாதம் முதல் நாளை அறுவடை திருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.
அதுமட்டுமன்றி, இயற்கைக்கும், சூரியனுக்கும், பசு, எருது உள்ளிட்ட உழவருக்கு தோள் கொடுக்கும் உயிர்களுக்கும் நன்றி கூறும் நல்லதொரு நாளாக பொங்கல் திகழ்கிறது. இப்பண்டிகை தனித்துவமான ஒன்று. ஏழை, பணக்காரர், சாதி, சமயம் என எந்த பேதமும் இன்றி அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் சமத்துவப் பண்டிகையாக பொங்கல் விளங்குகிறது.
சமூகத்தில் சகோதரத்துவத்தையும், மகிழ்ச்சியையும் விதைக்கும் இந்நாளில் மக்கள் வாழ்வில் அனைத்து வளமும் பெற வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com