நீதிபதி எம்.வி.முரளிதரன் மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்: கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் கடிதம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரனை, மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பாக அவரிடம் கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரனை, மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வது தொடர்பாக அவரிடம் கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவர் எம்.வி.முரளிதரன். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நீதிபதியாக பணியாற்றிய இவர் பல்வேறு பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். குற்றப்பத்திரிகை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்யாத காரணத்துக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 14 ஆயிரத்து 901 வழக்குககள் முடித்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி எம்.வி.முரளிதரன் போலீஸாருக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். 
அதே போல் தேசபக்தி பாடலான வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது தொடர்பான வழக்கில், தேசபக்தி பாடல் வங்கமொழியில் எழுதப்பட்டது எனவும், இந்த தேச பக்திப் பாடலை பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வாரம் ஒரு முறையும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒரு முறையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 
இந்த நிலையில் நீதிபதி எம்.வி.முரளிதரனை, மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி எம்.வி.முரளிதரனின் கருத்தைக் கேட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்துக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் கருத்து தெரிவித்ததும், அவர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றம் செய்து உத்தரவிடலாம் என கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com