பாஜகவுடன் அதிமுக கூட்டணியா..? அப்படினு நாங்கள் சொல்லவில்லை..!  

பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குருமூர்த்தி அவருடைய ஆசையை கூறியுள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார்
பாஜகவுடன் அதிமுக கூட்டணியா..? அப்படினு நாங்கள் சொல்லவில்லை..!  


சென்னை: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குருமூர்த்தி அவருடைய ஆசையை கூறியுள்ளார் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 

சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குருமூர்த்தி ஒரு பத்திரிக்கையாளராக இருந்து அவருடைய ஆசையை கூறியுள்ளார். 

பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினாலும், நாங்கள் கூட்டணி வைக்க விரும்ப வேண்டும் என்றவர், யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து செயற்குழு, பொதுக்குழு கூடி உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும். அதிமுக பொதுக்குழுவை கூட்ட கால அவகாசம் உள்ளது என்றவர், மக்களவைத் தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின் சூடான காட்சிகள் வெளியாகும். 

கொடநாடு விவகாரத்தில் அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது தற்போது நாகரிகமாக மாறிவிட்டது. இப்போது கொடநாடு விவகாரத்தை வைத்து புழுதி வாரி தூற்றப் பார்க்கிறார்கள். அது நடக்காது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் பல்வேறு திகில் காட்சிகளை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வார்கள். அதுவும் திமுக மற்றும் தினகரனிடம் இருந்து அதிகமான காட்சிகள் வரும். கொடநாடு விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றார். 

மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும், இல்லை என்றால் இந்த ஆட்சியே இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை. அது நிறைவேறாத ஆசை. ஸ்டாலின் தேர்தலை விரும்பினாலும் அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றார் ஜெயகுமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com