இறங்கிய வேகத்திலே ஏறும் பெட்ரோல், டீசல் விலை!

இறங்கிய வேகத்திலே ஏறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஒட்டிகள், வணிகர்கள், பொதுமக்களை மீண்டும் விழிபிதுங்க வைத்துள்ளது. 
இறங்கிய வேகத்திலே ஏறும் பெட்ரோல், டீசல் விலை!


சென்னை: இறங்கிய வேகத்திலே ஏறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஒட்டிகள், வணிகர்கள், பொதுமக்களை மீண்டும் விழிபிதுங்க வைத்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. 

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தலுக்காகவும் இறங்கு முகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதவாது 57 நாட்களுக்கு பின்னர் சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் வந்தநிலையில், கடந்த 9 ஆம் தேதி நிலவரப்படி ரூ.71.07 ஆக இருந்து வந்த பெட்ரோல், இன்று திங்கள்கிழமை (ஜன.21) நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.85 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் ரூ.69.41 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. 

கடந்த 10 நாட்களில் ஒரு லிட்டருக்கு ரூ.2.79 அதிகரித்துள்ளது. ரூ.66.01 ஆக இருந்து வந்த டீசல், இப்போது ரூ.3.40 அதிகரித்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது சிறிது இடைவெளி விட்டு மீண்டும் 11வது நாளாக அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com