திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழா திங்கள்கிழமை (ஜன.21) தொடங்குகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 172-வது ஆராதனை விழா திங்கள்கிழமை (ஜன.21) தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஜன. 25-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கும் இந்த விழாவில் மாலை 6 மணியளவில் தொடக்க விழா நடைபெறுகிறது. ஸ்ரீ தியாகபிரம்ம மஹோத்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் தலைமையில் நடைபெறும் இந்த விழாவை டி.வி. கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார். இதில்,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, சபா அறங்காவலர் குழுத் தலைவரும், தமாகா தலைவருமான ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து, குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா பாட்டு, சிக்கில் சி. குருசரண் பாட்டு, சந்தீப் நாராயணன் பாட்டு, பாபநாசம் அசோக் ரமணி பாட்டு, ராஜேஷ் வைத்யா வீணை உள்பட 13 இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதேபோல, இரண்டாம் நாளான ஜன. 22ஆம் தேதி 62 இன்னிசை நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாளான 23ஆம் தேதி 60 இன்னிசை நிகழ்ச்சிகளும், நான்காம் நாளான 24ஆம் தேதி 62 இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான ஜன. 25ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆராதனை நடைபெறவுள்ளது. இதில், ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள் பங்கேற்று ஒன்றிணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். பின்னர், தொடர்ந்து இரவு வரை இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com