சுடச்சுட

  

  வனக்காப்பாளர் பணி: இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு

  By DIN  |   Published on : 22nd January 2019 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வனக்காப்பாளர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இணையவழித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின்படி பிரிவு வாரியாக அந்த தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு முடிவுகள் மட்டும் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதத்தில் இணையவழியே தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளும், அடுத்தகட்ட தேர்வு பற்றிய தகவல்களும் www.forests.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன. இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் சென்னையில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai