ஜன.30 முதல் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி

இந்த ஆண்டுக்கான ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் ஜன. 30-ஆம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறவுள்ளது. 
ஜன.30 முதல் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி


இந்த ஆண்டுக்கான ஹிந்து ஆன்மிகக் கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் ஜன. 30-ஆம் தேதி முதல் பிப்.4 வரை நடைபெறவுள்ளது. 
ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் - பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. 
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். ஜன. 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கண்காட்சியின் தொடக்கவிழா நடைபெற உள்ளது. விழாவில் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து அருளாசி வழங்குகிறார். 
முன்னோட்ட நிகழ்ச்சிகள்: கண்காட்சியை முன்னிட்டு கடந்த ஜன.20-ஆம் தேதி முதல் ஜன.29-ஆம் தேதி வரை பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவேகானந்தர் ரத யாத்திரை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து ஜன.22-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேளச்சேரி நீச்சல் குள அரங்கில் வருணா - பண்பு சார்ந்த நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது. 
கண்காட்சியின் ஆறு பண்புகளை குறியீடாகக் கொண்டு பாம்பு வகை நீச்சல், சுதந்திர நீச்சல், மிதத்தல், பக்கவாட்டு நீச்சல், பட்டாம்பூச்சி நீச்சல், பின்புறமாக நீந்துதல் போன்ற நீச்சல் பயிற்சிகளை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்துகின்றனர். 
மூன்றாவது நிகழ்ச்சியாக ஜன.23-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி முதல் 
6. 30 மணி வரை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சம்ஸ்கார யோகா என்ற தலைப்பில் சுமார் 10,000 மாணவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான யோகாசன நிகழ்வு நடைபெறுகிறது. 
20,000 மாணவிகளின் இசை நிகழ்ச்சி: நான்காவது முன்னோட்ட நிகழ்ச்சியாக ஜன. 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 6. 30 மணி வரை மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் சுமார் 20,000 மாணவிகள் பாடல்களைப் பாடுகின்றனர். 
பாரதீய சம்ஸ்கார கானம் என்ற இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, மலையாளம், பெங்காலி, குஜராத்தி போன்ற மொழிகளில் மாணவிகள் பாடுகின்றனர்.
ஐந்தாவது நிகழ்ச்சியாக ஜன.27.-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணி முதல் 7. 30 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் பரத முனி சம்ஸ்கார நடனம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சுமார் 5,000 பேர் பங்கேற்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். இதே போன்று வரும் ஜன.29 வரை 11 முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 
இதைத் தொடர்ந்து ஜன.30 முதல் பிப்.4 வரை தொடர்ந்து ஆறு நாள்கள் ஜீவராசிகளை வணங்குதல், பெற்றோர் - ஆசிரியர்களை போற்றுதல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 
இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் துணைத் தலைவர் ராஜலட்சுமி, பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com