தியாகராஜ சுவாமிகளின் பெயரில் ஆய்வு இருக்கை தொடங்கப்பட வேண்டும்: தியாகராஜ ஆராதனை தொடக்க விழாவில் வலியுறுத்தல்

தியாகராஜ சுவாமிகளின் பெயரில் ஆய்வு இருக்கைத் தொடங்கப்பட வேண்டும் என்றார் பிரபல இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன்.
திருவையாறில் திங்கள்கிழமை மாலை சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 172 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை தொடங்கி வைத்த இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன். 
திருவையாறில் திங்கள்கிழமை மாலை சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 172 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை தொடங்கி வைத்த இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன். 


தியாகராஜ சுவாமிகளின் பெயரில் ஆய்வு இருக்கைத் தொடங்கப்பட வேண்டும் என்றார் பிரபல இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திங்கள்கிழமை மாலை சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 172 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை தொடங்கி வைத்து, அவர் மேலும் பேசியது:
லயத்துவத்தை இசை மூலம் உலகத்துக்குத் தெரியப்படுத்தியவர் சத்குரு தியாராஜ சுவாமிகள்தான். பாடல்களைப் பாடி வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறைதான் கீத கோவிந்தம் இயற்றப்பட்ட காலம் முதல் இருந்தது. ஆனால், தியாகராஜ சுவாமிகள் உயிரெழுத்துகளை வார்த்தைகளில் பயன்படுத்தி, சங்கீத மயமான பாடல்களை உருவாக்கினார். 
ஒவ்வொரு கீர்த்தனையையும் வித்தியாசப்படுத்தி உள்ளார். மிகவும் சுலபமான அவரது கீர்த்தனைகள் ஏராளமான ஆய்வுகளுக்கு உட்பட்டவை. பகவானிடம் எவ்வாறு சரணடைவது என்பதை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். அவரது பாடல்களைக் கேட்டாலே மோட்சம் கிடைக்கும். இசை மூலம் கடவுளை அடையலாம் என்பதை மக்களுக்குக் கூறியவர் தியாகராஜ சுவாமிகள்.
தமிழ்நாட்டில் பிறந்த தியாகராஜ சுவாமிகள் இசை மூலம் எப்படி கடவுளை அடையலாம் என்பதை உலகத்துக்கே சொன்னவர். தியாகராஜ சுவாமிகள் குறித்த ஆய்வுகள் இன்னும் நடைபெற வேண்டும். அதற்காக திருவையாறு இசைக் கல்லூரியில் தியாகராஜ சுவாமிகளின் பெயரில் ஆய்வு இருக்கைத் தொடங்கப்பட வேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணன். விழாவில் ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்சவ சபை அறங்காவலர் குழுத் தலைவர் ஜி.கே. வாசன் பேசியது: ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் தியாகராஜ சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர் சுவாமி தியாகராஜர். அவர் தெலுங்கு மொழியில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். என்றாலும், அவரது பாடல்கள் தெலுங்கு மொழியினர் மட்டுமல்லாமல், அனைத்து மொழியினரும் உணர்வுபூர்வமாக ரசித்து, மகிழும் விதமாக உள்ளது. அவரது சாதனைகளையும், பெருமைகளையும் பறைசாற்றும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழா தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவுள்ளது என்றார் வாசன்.
விழாவில் சபா செயலர்கள் அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், , ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், பொருளாளர் ஆர். கணேஷ், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், அறங்காவலர் சுரேஷ் மூப்பனார், டெக்கான் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com