இளை​ய​ராஜா-75 நிகழ்ச்​சிக்கு தடை கோரி மனு: திரைப்​பட தயா​ரிப்​பா​ளர் சங்​கம் பதி​ல​ளிக்க உத்​த​ரவு

தமிழ் திரைப்​ப​டத் தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கம் சார்​பில் வரும் பிப்​ர​வரி மாதம் நடை​பெ​ற​வுள்ள இளை​ய​ராஜா -75 பாராட்டு விழா​வுக்கு தடை விதிக்​கக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள


தமிழ் திரைப்​ப​டத் தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கம் சார்​பில் வரும் பிப்​ர​வரி மாதம் நடை​பெ​ற​வுள்ள இளை​ய​ராஜா -75 பாராட்டு விழா​வுக்கு தடை விதிக்​கக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனு​வுக்கு திரைப்​ப​டத் தயா​ரிப்​பா​ளர் சங்​கம் பதி​ல​ளிக்க உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ர​விட்​டுள்​ளது. 
சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் சினிமா தயா​ரிப்​பா​ள​ரான ஜே.எஸ்.​ச​தீஸ்​கு​மார் தாக்​கல் செய்த மனு​வில், சென்​னை​யில் வரும் பிப்​ர​வரி 2 மற்​றும் 3 ஆம் தேதி​க​ளில் இசை​ய​மைப்​பா​ளர் இளை​ய​ரா​ஜா​வுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்​ப​டத் தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கம் முடிவு செய்​துள்​ளது. இளை​ய​ரா​ஜா​வுக்கு பாராட்டு விழா நடத்த வேண்​டும் என்ற முடிவு தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கத்​தின் பொதுக்​கு​ழு​வைக் கூட்டி எடுக்​கப்​பட்ட முடிவு அல்ல. தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கத் தலை​வர் தன்​னிச்​சை​யாக இந்த முடிவை எடுத்​துள்​ளார். மேலும் முன்​னாள் தயா​ரிப்​பா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​கள் சங்​கத்​துக்கு ஏற்​கெ​னவே ரூ.7.73 கோ​டிக்கு முறை​யான கணக்​கு​க​ளைக் காட்ட​வில்லை. இந்த நிலை​யில் இளை​ய​ரா​ஜா​வுக்கு பாராட்டு விழா நடத்​தப்​பட்​டால் அந்த விழா​வி​லும் முறை​கே​டு​கள் நடை​பெற வாய்ப்​புள்​ளது. 
எனவே, தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கத்​துக்​கான தேர்​தல் மற்​றும் பொதுக்​கு​ழுவை ஓய்​வு​பெற்ற நீதி​பதி தலை​மை​யில் கூட்ட உத்​த​ர​விட வேண்​டும் என கோரி​யி​ருந்​தார்.
இந்த மனு நீதி​பதி கே.கல்​யா​ண​சுந்​த​ரம் முன் விசா​ர​ணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த நீதி​பதி, இந்த மனு தொடர்​பாக திரைப்​ப​டத் தயா​ரிப்​பா​ளர்​கள் சங்​கம் பதி​ல​ளிக்க உத்​த​ர​விட்டு, விசா​ர​ணையை வரும் ஜன​வரி 28-ஆம் தேதிக்கு ஒத்​தி​வைத்​தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com