போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி தள்ளிப்போகிறது

மத்திய மருந்துத் துறையின் தொழில்நுட்பக் குழுவினரின் நிர்வாகக் காரணங்களால் நிகழாண்டின் போலியோ சொட்டு மருந்து புகட்டும் தேதி தள்ளிப்போகிறது, விரைவில்
போலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி தள்ளிப்போகிறது


மத்திய மருந்துத் துறையின் தொழில்நுட்பக் குழுவினரின் நிர்வாகக் காரணங்களால் நிகழாண்டின் போலியோ சொட்டு மருந்து புகட்டும் தேதி தள்ளிப்போகிறது, விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் குளமங்கலம் மலைக்கோவிலில் செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக புதிய போலியோ தொற்றில்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் ஏராளமான விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது. 
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இன்னமும் போலியோ நோயை ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் போலியோ நோயை முழுமையாக ஒழிக்கும் வரையிலும் உலகம் முழுவதும் சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெறும்.
இந்நிலையில், இந்தியாவின் மத்திய மருந்துத் தொழில்நுட்பக் குழுவினரின் நிர்வாகக் காரணங்களால் பிப். 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் தேதி தள்ளிப் போகிறது. முகாம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் விஜயபாஸ்கர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com